மேலும் செய்திகள்
'தினமலர்' நமது பண்பாடு, கலாச்சாரத்தின் காவலன்
18-Oct-2025
வால்பாறை: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை போஸ்ட் ஆபீசில் 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. வால்பாறை நகரில் உள்ள போஸ்ட் ஆபீசில் நாள் தோறும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளுக்கு வருகின்றனர். இன்சுரன்ஸ், டெபாசிட் , பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்துகின்றனர். இது தவிர விரைவு தபால், பதிவு தபால்களை அனுப்புகின்றனர். இந்நிலையில், 'நெட் ஒர்க்' பிரச்னையால் கடந்த, 10 நாட்களாக வால்பாறை நகரில் உள்ள போஸ்ட் ஆபீசில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமலும், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த முடியாமலும் சிரமப்பட்டனர். இணையதள சேவையில் புதியதாக பொருத்தப்பட்ட சாப்ட்வேர் திடீர் பழுதானதால் தபால் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் கடந்த, 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பின் நேற்று முதல் 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, வழக்கம் போல் பணிகள் துவங்கப்பட்டன. 'தினமலர்' செய்தி எதிரொலியால் 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
18-Oct-2025