சோமையம்பாளையம் மக்கள் போராட திட்டம்
வடவள்ளி : சோமையம்பாளையம் ஊராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ள நிலையில், மாநகராட்சி மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, மொத்தம், 14 உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.இதில், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சோமையம்பாளையம் ஊராட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும், வரி உயரும் போன்ற காரணங்களால், சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.போராட்டங்களின் மூலம், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இன்று (ஜன.,19) சோமையம்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி, நாளை கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.