உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

மேட்டுப்பாளையம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வருகிற, 27ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹாரம், விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இன்று (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி ஆரம்பம் மற்றும் சுவாமிக்கு காப்பு கட்டுதலும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது. 26ம் தேதி வரை தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறும். 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு சக்திவேல் வாங்குதலும், அதைத் தொடர்ந்து கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 28ம் தேதி காலை, 10:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ