தெற்கு குறுமைய சதுரங்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல்
கோவை: குனியமுத்துார் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நடப்பு கல்வியாண்டுக்கான, தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது.அவ்வகையில், தெற்கு குறுமைய அளவிலான, 23 பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறங்காவலர் ரவீந்திரன், போட்டிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா ஆகியோர் போட்டிகளை வழிநடத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.