கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்அம்மாவாசையை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:30 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது.நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு பூஜை நெய்வேத்தியம், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.