மேலும் செய்திகள்
பென்னிக்கல்லில் வயல் விழா
24-May-2025
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, கோடங்கிபாளையம் ஊராட்சி தேவரடிபாளையம் மகாலட்சுமி கோவில் வளாகத்தில், உழவரைத் தேடி உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை அலுவலர் சுந்தர்ராஜன் பேசுகையில், விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் மற்றும் அதன் சார்ந்த திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள், கடன்கள் குறித்து விரிவாக பேசினார்.உதவி வேளாண் அலுவலர் உலகநாதன் பேசுகையில், வேளாண் சார்ந்த திட்டம், மானியம், பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகள் பற்றி கூறினார்.கோவை மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் திவ்யதர்ஷினி, மண் மாதிரி எடுத்தல், மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை துணை தோட்டக்கலை அலுவலர் பெருமாள்சாமி, பண்ணை குட்டை அமைத்தல், காய்கள் சாகுபடி, சொட்டுநீர் பாசனம், மானிய திட்டங்கள், பயிர் மேலாண்மை மற்றும் நோய் தாக்குதல் தடுக்க ஆலோசனைகள் வழங்கினார்.ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி அலுவலர் சந்தோஷ் ஏற்பாடு செய்தார். இதே போன்று மெட்டுவாவி ஊராட்சியில் முகாம் நடந்தது.
24-May-2025