மேலும் செய்திகள்
வெள்ளானைப்பட்டியில் நாளை சிறப்பு முகாம்
05-Aug-2025
கோவில்பாளையம்; சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்,' முகாம் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 15ம் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. அன்னூர் தாலுகாவில், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியின், ஒன்று முதல் ஒன்பதாவது வார்டு வரையிலான மக்களுக்கு, இன்று (20ம் தேதி) கோவில்பாளையம், ராகவேந்திரா மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. நாளை (21ம் தேதி) கொண்டையம் பாளையம் ஊராட்சி மக்களுக்கு, ஆசியன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், முகாம் நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும்.இதில் சிறப்பு திட்ட செயலாக்க துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 'பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் முகாமில் சமர்ப்பிக்கலாம்,' என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
05-Aug-2025