உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 11ல் நலம் காக்கும் மருத்துவ சிறப்பு முகாம்

வரும் 11ல் நலம் காக்கும் மருத்துவ சிறப்பு முகாம்

கோவை; கோவை மாநகராட்சி, 87வது வார்டு, குனியமுத்துார் காளவாய் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில், 11ம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்து வ முகாம் நடக்கிறது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடக்கும் இம்முகாமில் கண், பல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம் உட்பட, 18 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை