உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

 ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

காந்திபுரம்: கோவையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. காந்திபுரம் நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பாதிரியர் ததேயூஸ் அமலதாஸ் தேவநற்செய்தி வழங்கினார். சிறப்பு திருப்பலியும் பிரார்த்தனையும் நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெரியகடைவீதி மிக்கேல் அதிதுாதர் பேராலயம், திருச்சி சாலை கிறிஸ்துநாதர் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் தின நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் வீடுகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு விருந்து பரிமாறி மகிழ்ந்தனர். தேவாலயங்களுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அரசியல் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !