உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் வேண்டும்’

‘தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் வேண்டும்’

கோவை: கோவையில் இருந்து ராமேஸ்வரம், நாகை, போடி உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ்க்கு, தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பினர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘தீபாவளி சமயத்தில் ஏற்படும் நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகாணும் விதமாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். அதன்படி, சென்னையில் இருந்து கோவை, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை வழியாக திருநெல்வேலி, மதுரை, தேனி வழியாக போடி, திருச்சி வழியாக ராமேஸ்வரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில் அவசியம். அதேபோல், கோவையில் இருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர் வழியாக நாகை, சிவகாசி, அருப்புக்கோட்டை, மதுரை வழியாக கொல்லம், நாகர்கோவில் வழி திருவனந்தபுரம், கும்பகோணம் வழி தாம்பரம், தஞ்சை வழி கடலுார் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கினால் பயணிகள் அலைச்சலுக்கு தீர்வாக அமையும்’ என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை