உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமாவாசை, கார்த்திகை வழிபாடு கோவில்களில் சிறப்பு ஆராதனை

அமாவாசை, கார்த்திகை வழிபாடு கோவில்களில் சிறப்பு ஆராதனை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மாசாணியம்மன் கோவிலில், வைகாசி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சூலக்கல் மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி கரிவரதராஜபெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி அமாவாசை மற்றும் கார்த்திகை நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு அபிேஷக, ஆராதனை நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:30 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு பூஜை நெய்வேத்தியம், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி