ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் விளையாட்டு வளாகம் திறப்பு
கோவை; சின்னியம்பாளையம், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், அதிநவீன விளையாட்டு வளாகம் திறக்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், 10 ஆயிரம் சதுர அடியில், ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தார்.இந்த விளையாட்டு வளாகத்தில், 65x25 அடி ஏறும் சுவர், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி உடற்பயிற்சி கூடங்கள், ஒரு இசை அறை மற்றும் டேபிள் டென்னிஸ், சதுரங்கம் மற்றும் கேரம்போர்டு போன்ற உட்புற விளையாட்டுகளுக்கான பல்வேறுநவீன வசதிகள் உள்ளன. கலை பயற்சிக்கு வசதியாக, ஒரு பிரத்யேக கலை மண்டபமும் இதில் உள்ளது.ஸ்ரீ சக்தி கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கவேலு, செயலாளர் தீபன், இணைச் செயலாளர் சீலன் மற்றும் கல்லுாரி முதல்வர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.