அக்சயா அகாடமியில் விளையாட்டு விழா
கோவை; பன்னீர்மடை அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ.சீனியர் செகண்டரி பள்ளியின் விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை தெற்கு காவல் துறை துணை கமிஷனர் தேவநாதன், மாணவர் படை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு விழாவை துவக்கி வைத்த அவர், ''விளையாட்டு என்பது, உடலை, உள்ளத்தை வலுப்படுத்தும் ஆயுதம்,'' என பேசினார். பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற மாணவர்களுக்கு, பள்ளி செயலாளர் உயபட்டாபிராம் கோப்பை வழங்கி, கவுரவப்படுத்தினார்.பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.