உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள்; விரைவில் நியமனம்; மாணவர்களுக்கு உத்வேகம்

மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள்; விரைவில் நியமனம்; மாணவர்களுக்கு உத்வேகம்

கோவை; உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களால் விளையாட்டு திறனைமேம்படுத்த முடியாதுஏங்கிய மாணவர்களுக்கு,34 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது சாதிக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ், 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களிடம் கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களிடம் விளையாட்டு போட்டி கனவை களைத்துவிடுகிறது. கடந்த, 10ம் தேதி நடந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திலும், மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், விளையாட்டு திறனையும் மேம்படுத்த உடற்கல்வி ஆசிரியர்கள் தேவை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டது. ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி இரு பாலர் மேல்நிலைப் பள்ளி, உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட, 34 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததுதெரியவந்தது.மாணவர்களிடம் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக, பள்ளி மேலாண்மை குழு வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனால், கல்வியையும் தாண்டி, விளையாட்டில் மாணவர்களிடம் சாதிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக!

மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறுகையில்,'பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் வெளிமுகமை அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். 34 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.12 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்படுகினறனர். இப்பணியிடங்களில் நேரடி நியமனம், அலகு விட்டு அலகு மாறுதல் முறையில் நிரப்பப்படும் வரைஇவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்படுவர்' என்றனர்.

தலைமை ஆசிரியர்

கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலை பள்ளி, சங்கனுார் நடுநிலை பள்ளி, மசக்காளிபாளையம் நடுநிலைப் பள்ளி உட்பட, 16 பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் மாதம் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். இத்தொகையானது மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து வழங்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி