உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மாலையில் 2 மணி நேரம் நடக்குது

மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மாலையில் 2 மணி நேரம் நடக்குது

பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து, தினமும் மாலையில், 2மணி நேரம் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு கால்பந்து, கபடி, கோ-கோ, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டு பயிற்சி அளிக்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.விளையாட்டில் ஆர்வம் கொள்ளும் மாணவர்கள், இதனை முறையாக பயன்படுத்தியும் வருகின்றனர். அதேநேரம், இம்மாதம், குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், குறு மைய அளவில் துவங்க உள்ளதால், அதனை எதிர்கொள்ள, மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளி அளவில், தடகளம், வாலிபால், கால்பந்து, இறகுபந்து என, ஒவ்வொரு போட்டியிலும் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் வகையில் தயார்படுத்துகிறோம்.குறிப்பாக, தினமும் மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை, மாணவ, மாணவியருக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது, மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு கைகொடுக்கும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர்.போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தனியார் பங்களிப்புடன் தேவையான விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள் பெறுவதற்கு முயற்சிக்கிறோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி