உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ அய்யனார் ஆதினம் சுதந்திர தினவிழா

ஸ்ரீ அய்யனார் ஆதினம் சுதந்திர தினவிழா

கோவை; கோவை மாநகராட்சி 79 வது வார்டு, கல்லாமேடு முத்துசாமி காலனியிலுள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ அய்யனார் ஆதீனம் சீனிவாசசுவாமிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து, இனிப்புகளை வழங்கினார். சிறப்பு பேச்சு போட்டி, நடனபோட்டி, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட் சார்பில் வெற்றி கோப்பை மற்றும் கேடயங்களை சீனிவாசசுவாமிகள் வழங்கினார். சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார். கவுன்சிலர் வசந்தாமணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ