ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் இசைக்கச்சேரி; ரசிகர்கள் குஷி
கோவை; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த இசைக்கச்சேரியை, பொது மக்கள் கண்டு ரசித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'இளமை எனும் பூங்காற்று' என்ற தலைப்பில், திரைப்பாடகர் சாய் விக்னேஷின் இசைக்கச்சேரி நேற்று, கிக்கானி பள்ளி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதன்மை செயல் அதிகாரி வைத்தியநாதன் துவக்கி வைத்தார். இதில் சாய் விக்னேஷ் பாடகர் குழுவினர், இரண்டு மணி நேரம் பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி, ரசிகர்களை மெய்மறக்க செய்தனர். நிகழ்ச்சியில், பாடல் குழுவினர் எஸ்.பி., பாலசுப்ரமணியம் போன்ற லெஜன்ட்களின் பாடல்களை பாடி அசத்தினர். ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களையும் பாடி குஷிப்படுத்தினர்.