மேலும் செய்திகள்
தங்கத் தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி வலம்
30-Sep-2025
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி உலா வந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், தீபாவளியையொட்டி ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் இட, தங்க தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது மாட வீதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தார் செய்திருந்தனர்.- --
30-Sep-2025