உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை: ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரியில், 33வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற, 39 மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மொத்தம், 950 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பட்டங்களை வழங்கி, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை டாக்டர் ராமமூர்த்தி பேசுகையில்,''நீங்கள் பிறந்த வளர்ந்த மண், மனிதர்களை, பாடம் கற்பித்த ஆசிரியர்களை மறக்கக்கூடாது. எதை மறந்தாலும் தாய், தந்தையரை மறக்கக்கூடாது. பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார். முன்னதாக, முதல்வர் சுப்ரமணி கல்லுாரி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தலைவர் மகாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, துணைத் தலைவர் கமேஷ் பாப்னா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ