உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மக்களின் நம்பிக்கை பெற்ற ஸ்ரீ பூஜா குரூப் ஆப் கம்பெனிஸ்

கோவை மக்களின் நம்பிக்கை பெற்ற ஸ்ரீ பூஜா குரூப் ஆப் கம்பெனிஸ்

கோ வை, அவினாசி ரோடு, சிட்ரா எதிரேஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டு துவங்கப்பட்டு, 25 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் துறையின் மிக பிரபலமான மற்றும் நம்பகமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வீட்டுமனைகள் மட்டுமின்றி வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலமதிப்பு உயர்வு ஆகியவற்றுக்கு மிகச்சாதகமான மற்றும் தரமான வாழ்க்கை முறைக்கு தேவையான இடத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் அதிக வாடகை வருவாயையும் முதலீடுகளின் மீதான நல்ல வருமானத்தையும் வழங்குகிறது. ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனை மையப்படுத்தி செயல்படுகிறது. சலுகைகள் மூலம் நேர்மையான அனுபவங்களை மக்களுக்கு வழங்குகிறது. மிக எளிமையான பரிவர்த்தனைகள் இந்நிறுவனத்தின் மற்றும் ஓர் சிறப்பம்சமாகும். இதனால் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தை தேடி வருகின்றனர். நேர்மையான வாடிக்கையாளர்கள் அனுபவங்களை உறுதிசெய்தல், சிறந்த தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை கிடைக்கச் செய்வது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நம்பிக்கையே அவர்களது வணிகத்தை நீண்ட கால உறவுகளாக மாற்றியது. வாடிக்கையாளர்களை தங்களில் ஒருவராகவே கருதுவதாலும், அவர்களின் தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வதாலும் குடும்ப உறுப்பினராகவே வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர். ஒரு முறை வந்த வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் சேவையால் ஈர்க்கப்பட்டு திரும்பவும் வருகின்றனர். பூஜா குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தில் ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ், ஸ்ரீ பூஜா டைல்ஸ், ஸ்ரீ பூஜா ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல்ஸ், எஸ்.பி. இன்டீரியர், பூஜா இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களும் செயல்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், பூஜா புரமோட்டர்ஸில் பிளாட் டெவலப்மன்ட் மற்றும் கட்டுமானங்கள் நல்ல முறையில் கட்டி கொடுத்து வருகிறார்கள். தற்போது புளியம்பட்டியில் டி.டி.சி.பி., வீட்டுமனைகள், பண்ணை நிலங்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், ஈச்சனாரியில் 8 ஏக்கரில் பூஜா வியாழம் பிரீமியம் டி.டி.சி.பி., வில்லா விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு 1.5 சென்ட் முதல் 9 சென்ட் வரை 120 சைட்டுகள் விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் அன்னுார், கரியாம்பாளைத்தில் அகாசியா கார்டன் என்ற பெயரில் 23 சைட்டுகள் விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு 3.5 சென்ட் முதல் 7 சென்ட் வரை சைட்டுகள் உள்ளன. மேலும் இந்தாண்டு புதியதாக பூஜா புரமோட்டர்ஸ் பொன்னேகவுண்டன் புதுாரில் சுபகணேஷ் கார்டன் என்ற பெயரில் சைட்டுகள் விற்பனை செய்யபட உள்ளது. ஸ்ரீ பூஜா ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் ஹார்டுவேர்ஸ், ஸ்டீல், எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிளம்பிங், டைல்ஸ், சிமென்ட், சப்மெர்சிபிள் பம்புகள், டொமஸ்டிக் பம்புகள், அனைத்து கம்பெனி பெயின்ட்டுகள், கார்பென்டரி, இன்டீரியருக்கு தேவையான பொருட்கள். சானிட்டரிவேர் மற்றும் அனைத்து விதமான கட்டுமான வீட்டு உபயோக பொருட்களும் நல்ல தரத்துடன் குறைந்த விலையில் கொடுத்து வருவதால் கோவை மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !