ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி 12வது பட்டமளிப்பு விழா
கோவை : ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரியின், 12வது பட்டமளிப்பு மற்றும் ரங்கநாதன் ஆர்க்கிடெக்சர் கல்லுாரியின் 7வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்வில் சென்னைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கவுரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார். பட்டங்கள் பெறுவதுடன் கல்வி என்பது முடிவு பெறுவதல்ல; வாழ்நாள் முழுவதும் கற்றல் தொடரவேண்டும் என, வல்லுநர்கள் அறிவுரை வழங்கினர். இதில், அண்ணா பல்கலை முன்னாள் பதிவாளர் பெருமாள்பிள்ளை கல்லுாரி தாளாளர் தமிழரசி முருகேசன், சி.இ.ஓ., ரவிச்சந்திரன், முதல்வர் ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.