உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்

காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண வைபவம்

கோவை: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில், ஸ்ரீ வள்ளி கல்யாண வைபோகம் பக்தர்கள் சூழ, கலை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன், கோலாகலமாக நடந்தது. குருஜி ராகவன் சிஷ்யர் வைத்தியநாதன் தலைமையில், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணி சுவாமிகளின் திருக்கல்யணா வைபவம், காலை 9:00 மணிக்கு துவங்கியது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி திருமண கோலத்தில், கோவில் மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர். சிவாச்சாரியர்கள் யாகசாலை அமைத்து, வேள்வியை நிறைவு செய்தனர். தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை பாராயணம் செய்ய, மங்கள இசை ஒலிக்க, வள்ளி, தெய்வானையருக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. சிவாச்சாரியர்கள், சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வை நிறைவேற்றினர். தேங்காய் உருட்டுதல், சுண்ணம், மஞ்சள் இடித்தல், சீர்வரிசை சமர்ப்பித்தல் சம்பிரதாயங்கள் நிறைவேறின. பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைத்தல் நிகழ்ச்சியும்நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியும் ஆன்மிக இசை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ