உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான கவிதை போட்டி; எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிக்கு முதலிடம்

மாவட்ட அளவிலான கவிதை போட்டி; எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிக்கு முதலிடம்

மேட்டுப்பாளையம்: தமிழக அரசு நடத்திய, மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவித்தல் போட்டியில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். கவிஞர் 'தமிழ் ஒளி'யின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை ஒப்புவித்தல் போட்டி, கோவையில் நடந்தது. உதவி கலெக்டர் பிரசாத், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அன்பரசி முன்னிலையில் போட்டி நடந்தது. மாவட்ட அளவில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பவநவி, முதலிடம் பெற்றார். இவருக்கு அரசின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. கோவையில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி சன்விகா, உயரம் தாண்டுதல் மற்றும் தடைகள் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஈட்டி எறிதல் போட்டியில், பத்தாம் வகுப்பு மாணவர் சர்வேஷ் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவ, மாணவியர் இருவரும் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். கவிதை போட்டியிலும், தடகளப் போட்டியிலும் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளை எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, செயலாளர் மோகன்தாஸ் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ