ஊராட்சி செயலர்களுக்கு தேக்க நிலை ஊதியம்
சூலுார் : 30 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு தேக்க நிலை ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழநாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்களில் பெரும்பாலானோர், 1996ல் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். கடந்த, 2018 ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு அவர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், 2018 ஆண்டுக்கு பிறகு புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்களுக்கும், ஏற்கனவே பணியில் உள்ள ஊராட்சி செயலர்களுக்கும், ஒரே ஊதிய நிலை உள்ளது. எனவே, 30 ஆண்டுகள் பணி முடிந்த செயலர்களுக்கு தேக்க நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியமும், 10 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.