உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவு நீர்; விலங்குகளின் உயிருக்கு ஆபத்து

வனத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவு நீர்; விலங்குகளின் உயிருக்கு ஆபத்து

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஓடந்துறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் அருகே ஊட்டி சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன. இவற்றின் கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகின்றன. இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பலமுறை ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு வனத்துறை அறிவுறுத்தியும், சாக்கடை கழிவு நீரை வனத்திற்குள் செல்லாமல் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக அண்மையில் கழிவுநீர் செல்லும் பாதையை மண் கொட்டி அடைத்தனர். இதனால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். துர்நாற்றம் வீசியது. ஆனாலும் ஓடந்துறை ஊராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த மண் ெபாக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டது.இதனால் தற்போது மீண்டும் வனத்திற்குள் கழிவு நீர் சென்று தேங்கி நிற்கிறது. இதனை வனவிலங்குகள் குடிப்பதால் உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ