மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
கோவை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் கடந்த, 2ம் தேதி துவங்கியது; வரும், 14ம் தேதி நிறைவடைகிறது. மாவட்ட கூடைப்பந்து சங்கம் நடத்தும் இப்போட்டியில், 38 மாவட்டங்களின் அணிகள் பங்கேற்றுள்ளன. மாணவர்களுக்கான போட்டியில் கரூர் அணியும், நீலகிரி அணியும் மோதின. இதில், 52-48 என்ற புள்ளி கணக்கில் நீலகிரி அணி வெற்றிபெற்றது. சேலம் அணியும், ராணிப்பேட்டை அணியும் மோதின; 96-29 என்ற புள்ளிகளில் சேலம் வெற்றிபெற்றது. மாணவியருக்கான போட்டியில், திருவள்ளூர் அணியும், கடலுார் அணியும் மோதின. இதில், 60-46 என்ற புள்ளிகளில் திருவள்ளூர் அணி வெற்றிபெற்றது. செங்கல்பட்டு அணியும், விருதுநகர் அணியும் மோதியதில், 26-46 என்ற புள்ளிகளில் விருதுநகர் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.