உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநில அளவிலான கபடி போட்டி

 மாநில அளவிலான கபடி போட்டி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசக நகரில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில் சாமி செட்டிபாளையம் டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணி சாம்பியன் கோப்பை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு வென்றது. இரண்டாம் இடத்தை ஆர்.வி.கே.சி., அணி பெற்றது. மூன்றாம் இடத்தை திருமலை நாயக்கன்பாளையம் கார்த்திக் நினைவு அணியும், நான்காம் இடத்தை, வி2 ஸ்போர்ட்ஸ் அணியும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ