மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு மூன்றாமிடம்
கோவை; மாநில அளவிலான வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி மூன்றாம் இடம் பிடித்தது.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பள்ளி வளாகத்தில், மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. இதில், தமிழகத்தின் தலைசிறந்த ஆறு அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த முதல் போட்டியில், கோவை கற்பகம் பல்கலை அணியானது, 3-0 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி., அணியை வென்றது.இரண்டாம் போட்டியில் திருப்பத்துார் அணியை, 3-0 என்ற செட் கணக்கிலும், மூன்றாம் போட்டியில் பனிமலர் அணியை, 3-2 என்ற செட் கணக்கிலும் வென்றது. நான்காம் போட்டியில், 0-3 என்ற செட் கணக்கில், சென்னை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.போட்டியின் நிறைவில், கற்பகம் பல்கலை அணி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணியினருக்கு, பல்கலை துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.