மாநில அளவிலான யோகா போட்டி
மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்றனர். ஓசோன் யோகா சென்டர், நாநா யோகா ஸ்டுடியோ சார்பில், கோவை நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான யோகா போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் காரமடை ரங்கநாதர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 800க்கும் என மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகள் நடைபெற்ற போட்டிகளில் காரமடை ரங்கநாதர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கல்யாண சுந்தரம், முதல்வர் நந்தினி உள்ளிட்டோர் பாராட்டினர்.