உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்.,ல் மாநில ரேடியாலஜி கருத்தரங்கு

கே.எம்.சி.எச்.,ல் மாநில ரேடியாலஜி கருத்தரங்கு

கோவை : மாநில அளவில் இந்திய இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி கழக, கிளையின் முதலாவது இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி கருத்தரங்கு, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில், லண்டனில் இருந்து டாக்டர் கிருஷ்ணபிரசாத், டல்லாஸ் பல்கலை மருத்துவமனையை சேர்ந்த, டாக்டர் சஞ்சீவ் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். இதில், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் ரத்த நாள நோய்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், முதுநிலை மாணவர்கள், நேரடியாலஜி துறை நிபுணர்கள் பங்கேற்று நேரடி செயல்விளக்க பயிற்சி பெற்றனர். துவக்க விழாவில், கே.எம்.சி.எச்., நிர்வாக இயக்குனர் நல்லா பழனிசாமி, துணைத்தலைவர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை