மேலும் செய்திகள்
போதையில் தகராறு இருவர் கைது
24-Oct-2025
கிணத்துக்கடவு: கேரளா மாநிலத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மணிகண்டன், 27. இவர், கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்துார் தனியார் கல் குவாரியில் வேலை செய்தார். இந்நிலையில், நேற்று குவாரியின் மேல் பகுதியில் மணிகண்டன் மொபைல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அருகில்தென்னை மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, தேனீக்கள் அவரை கொட்டியது. அதில், நிலைதடுமாறி கல்குவாரியில் விழுந்த அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2025