உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செய்தித்தாள்களில் வடை, போண்டா சுருட்டி சாப்பிடும் வழக்கம் வேண்டாம்

செய்தித்தாள்களில் வடை, போண்டா சுருட்டி சாப்பிடும் வழக்கம் வேண்டாம்

கோவை: செய்திதாள்களில் நேரடியாக உணவு பொருட்களை மடித்து வாங்கவேண்டாம் என, பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.போதிய விழிப்புணர்வு இன்றி பஜ்ஜி, போண்டா உட்பட பல்வேறு பொருட்கள், செய்தித்தாள்களில் மடித்து வழங்கப்படுகின்றன. செய்தித்தாள் அச்சடிக்க உதவும் மை, மனித உடல் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன்.அவர் கூறுகையில், ''ஒரு சிலர் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை வாங்கி, செய்தித்தாளில் அழுத்தி எண்ணெய் பிழிவதை காணமுடிகிறது. அதிலுள்ள எண்ணெயை காட்டிலும் தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை இலை, தேக்கு இலை போன்றவற்றை பயன்படுத்தி வழங்க அறிவுறுத்தியுள்ளோம். பார்சல் கட்டுவதற்கு தாளை வைத்து, அதன் மேல் இலை வைத்து கொடுக்க வேண்டும். எந்த வகையிலும், உணவும், செய்தித்தாள்களும் நேரடி தொடர்பில் வைக்க கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை