உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தெருநாய் கருத்தடை மையம் திறப்பு

 தெருநாய் கருத்தடை மையம் திறப்பு

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் ரூ.4.13 கோடியில் கட்டியுள்ள தெருநாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தை, எம்.பி.கள் ஈஸ்வரசாமி, ராஜ்குமார் நேற்று திறந்து வைத்தனர். இங்கு கருத்தடை சிகிச்சை மையம், 50 தெருநாய்கள் அடைக்கும் கூண்டு, மருத்துவர் அறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டியிருப்பதை பார்வையிட்டனர். பின், நாய்களை அழைத்துச் செல்லும் 4 வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது. குறிச்சி மாநகராட்சி பள்ளியில் கட்டியுள்ள வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர், ஸ்ரீராம் காலனி, பாலு கார்டன், ஆசாத் நகரில் ரேஷன் கடைகள், பி.கே.புதுார், நரசிம்மபுரம், சுகுணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் வைத்துள்ள கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மேயர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை