உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.கே.என்.எம்., சார்பில் பக்கவாத விழிப்புணர்வு

ஜி.கே.என்.எம்., சார்பில் பக்கவாத விழிப்புணர்வு

கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பகுதியிலுள்ள, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை அர்பன் மையத்தில், பக்கவாத விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. நடப்பாண்டுக்கான, உலக பக்கவாத தின கருப்பொருளை மையமாக கொண்டு, பொதுமக்களை விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளில் பங்கேற்க வைக்க, நர்சிங் மாணவர்கள் ஒரு உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தினர். அதை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஸ்ட்ரோக் ஏற்படும் போது, 4- 5 மணி நேரத்திற்குள் அதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையை அடைந்து, சிகிச்சை பெறவேண்டியது அவசியம். ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. சமீபத்தில், தரக்கட்டுப்பாடு மற்றும் அங்கீகாரம் (க்யூ.ஏ.ஐ.,) நிறுவனத்தில் இருந்து, ஸ்ட்ரோக் மையமாக இம்மருத்துவமனை அங்கீகாரத்தை பெற்றுள்ளது. விழிப்புணர்வு நிகழ்வில், தலைமை மருத்துவ அதிகாரி மனோகரன், நிர்வாக மருத்துவ இயக்குனர் சந்தோஷ்குமார் டோரா, மருத்துவ இயக்குனர் சந்தோஷ், நியூரோ தலைமை ஆலோசகர் ரஷ்மி ரஞ்சன்பாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை