உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பக்கவாத கருத்தரங்கு

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பக்கவாத கருத்தரங்கு

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, நரம்பியல் துறையின் மேம்பட்ட பக்கவாத மையம் சார்பில், அவிநாசி ரோடு, ஓட்டல் ரெசிடென்சி டவர்சில், 'ஸ்ட்ரோக் மேலாண்மையின் அடிப்படைகள் மற்றும் முன்னேற்றங்கள்' என்ற, பக்கவாத மருத்துவ கருத்தரங்கு நடந்தது. நிகழ்வில், நரம்பியல் நிபுணர்கள், பக்கவாத வல்லுனர்கள் உள்ளிட்ட மூத்த மருத்துவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். பக்கவாதம் கண்டறிதல், சிகிச்சை, அவசர பராமரிப்பு மற்றும் நீண்ட கால மேலாண்மை ஆகிய துறைகளில், சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய ஆழமான பார்வையையும், நடைமுறை வழிகாட்டு தல்களும் வழங்கப்பட்டன. மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், துணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை