உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விறகுக்கு மரம் ஏறிய மாணவர் காயம்

 விறகுக்கு மரம் ஏறிய மாணவர் காயம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி விடுதியில், காஸ் சிலிண்டர் தீர்ந்ததால் விறகுக்காக மரம் ஏறிய மாணவர், கீழே விழுந்து காயமடைந்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் தனியார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 2 படிப்பவர் நந்தகுமார், விடுதியில் காஸ் சிலிண்டர் தீர்ந்ததால், அங்கிருந்த மரத்தில் ஏறி விறகு பறிக்க, விடுதி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். நந்தகுமார் மரத்தில் ஏறி விறகு பறித்த போது, தவறி விழுந்து இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஜோதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ