உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விண்வெளி வாரவிழா போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

விண்வெளி வாரவிழா போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

உடுமலை: உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், சர்வதேச விண்வெளி வாரவிழா கொண்டாடப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் உடுமலையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், விண்வெளி வார விழா அக்., 4ம்தேதி முதல் அக்., 10 ம்தேதி வரை கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தேஜஸ் ரோட்டரி சங்கம், கமலம் கலை அறிவியல் கல்லுாரி, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், விண்வெளி வார விழா போட்டிகள் நடத்தப்படுகிறது.நடப்பாண்டில் 'விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்' என்ற தலைப்பில் போட்டிகள் நடக்கிறது.அந்தியூர், கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் அறிவியல் திறனறிப்போட்டிகள் அக்., 4ம் தேதி முதல் நடக்கிறது. அன்று, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடக்கிறது.தொடர்ந்து 8ம் தேதி 'விண்வெளி துறையில் இந்தியா' என்ற தலைப்பில் இணையவழி வினாடிவினா போட்டி மாலையில் நடக்கிறது. அப்போட்டியில், 25 வினாக்கள் கேட்கப்படுகிறது.முதலில் பதில் தரும் முதல் பத்து நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இறுதியாக அக்., 10ம் தேதி குழு நடனப்போட்டி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை என மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 87782 01926, 88835 35380 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை