வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாகிஸ்தான், பங்காளாதேஸ் மாணவர்கள் தானே
கோவை: ‘‘ராகுலுடன் கலந்துரையாட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்,’’ என, காங்., கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா கூறினார். அகில இந்திய காங்., கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா கோவை மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில் வரும் 10ம் தேதி ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிவதுடன், வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடுகிறார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு, நீட் பயிற்சிக்கு அதிக கட்டணம் போன்ற பிரச்னைகளுக்காக மாணவர்கள் போராடுகின்றனர். ஜனநாயக முறையில் போராடினாலும் அவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை காக்க முடியவில்லையேல் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். சென்னையில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது தேவைகளை ராகுலிடம் முன்வைக்க உள்ளனர். இதற்கென மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ. ஆர்.,) வாயிலாக மக்களின் ஓட்டுரிமையை பறித்துள்ளது. இதை கண்டித்து டெல்லியில் ‘இண்டி’ கூட்டணியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
பாகிஸ்தான், பங்காளாதேஸ் மாணவர்கள் தானே