உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி சுற்றுலாவில் மாணவர்கள் குஷி

கல்வி சுற்றுலாவில் மாணவர்கள் குஷி

கோவை:எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, 'எனது கனவு இந்தியா' என்ற பெயரில், மாநில அளவிலான ஆன்லைன் கட்டுரை போட்டியை, பள்ளி மாணவர்களுக்கு நடத்தியது.தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வை சேர்ந்த, 7 ஆயிரத்து 861 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல், 200 வெற்றியாளர்களை இரண்டு நாள் ஊட்டிக்கு கல்விச் சுற்றுலாவை, ஸ்ரீ சக்தி கல்லுாரி ஏற்பாடு செய்திருந்தது.இதன்படி மாணவர்கள், ஊட்டி வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாற்று சிறப்புமிக்க, நீலகிரி மலை ரயில் பயணம் மற்றும் ஊட்டியின் பல்வேறு இடங்களை, மாணவர்கள் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !