உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடகளப் போட்டியில் அசத்திய மாணவர்கள்

தடகளப் போட்டியில் அசத்திய மாணவர்கள்

பொள்ளாச்சி; தென்மண்டல அளவில், சி.பி.எஸ்.சி., பள்ளிகள் இடையிலான தடகளப் போட்டி, கரூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில், பொள்ளாச்சி ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி ஆர்யசுஷ்சாந்த் குண்டு எறிதலில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்தார். மாணவர் பிரனீத் குண்டு எறிதலில் இரண்டாமிடம் பிடித்தார். இவர்கள் இருவரும், தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதிபெற்றனர். இவர்களை, பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, முதல்வர் அரசுபெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !