உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தென்னை மகசூல் அதிகரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்

 தென்னை மகசூல் அதிகரிக்க மாணவர்கள் செயல் விளக்கம்

பெ.நா.பாளையம்: வேளாண் பல்கலை மாணவர்கள், விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டு அறிந்து, அதற்கு ஏற்ப தொழில் நுட்பங்கள் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். இவர்கள், பெரியநாயக்கன்பாளையம் அருகே வட்டபாறைபுதூரில் தென்னையில் மகசூலை அதிகரிக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தென்னை டானிக் மற்றும் தென்னை நுண்ணூட்ட கலவையின் பயன்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தென்னை டானிக்கை வேர் வாயிலாக செலுத்தினால் தென்னை விளைச்சலை அதிகரிக்கலாம் என்றும், தென்னை மரத்துக்கு தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் தென்னை டானிக் கொண்டுள்ளது. தென்னை மரத்திலிருந்து மூன்று அடி தள்ளி மண்ணை அகற்றி, பென்சில் தடிமன் கொண்ட இளஞ்சிவப்பு நிற வேரை தேர்வு செய்து, அதை சிறிது சாய்வாக வெட்டி, 200 மில்லி டானிக் நிரப்பப்பட்ட பாலத்தின் பையை வைத்து கட்ட வேண்டும். அடுத்த நாள் அந்த வேரானது டானிக்கை உறிஞ்சி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அளிப்பதன் வாயிலாக, தென்னை மகசூலை அதிகரிக்கலாம் என்றனர். இதே போல தென்னை நுண்ணூட்டக் கலவையை பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை