உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கட்டுமான பணியால் மாணவர்கள் அவதி

 கட்டுமான பணியால் மாணவர்கள் அவதி

கோவை: ஆர்.எஸ்.புரம், தேவாங்க பள்ளி ரோட்டில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வகுப்புகள் நடைபெறும் போதே பணி நடக்கிறது. நுழைவாயில் அருகே சீரமைப்பு பணி நடப்பதால் இதைக் கடந்துதான் குழந்தைகள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், கான்கிரீட் கலவை லாரிகள் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளன. காற்றில் பறக்கும் சிமென்ட், மண் துகள்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரனிடம் கேட்டபோது, ''மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பணி செய்ய தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை