உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

கோவை: போத்தனுார்–மேட்டுப்பாளையம் மெமு ரயில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் நிலையத்தை நெருங்கிய போது, தண்டவாளத்தின் இருபுறமும் நின்றிருந்த மாணவர்கள் கற்களை ரயில் மீது வீசினர். இன்ஜின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. லோகோ பைலட் டென்னி தாமஸ்க்கு லேசான காயம் ஏற்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். பின்னர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில் மீது கல் வீசிய மூன்று பள்ளி மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு தேர்வுகள் உள்ளதால், பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை