உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவர்கள்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி, வெள்ளாளபாளையம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், கீழடி அருங்காட்சியகத்துக்கு கல்வி சுற்றுலா சென்றனர். அங்கு, மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், நெசவு கருவிகள், ஆபரணங்கள், இரும்பு, வெண்கல பொருட்கள், நாணயங்கள், அரச முத்திரைகள், பல்லாங்குழிகற்கள், சதுரங்க காசுகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பார்வையிட்டனர். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு தொன்மை, நாகரிகம் ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.தமிழர்களின் நாகரிக தொட்டிலான கீழடியை நேரில் பார்ப்பது, பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாக தெரிவித்தனர். இதில், வெள்ளாளபாளையம் தலைமையாசிரியர் ரஷியா பீபி, ஆசிரியர்கள் சித்ரா, ஜாஸ்மின், ஜெபராணி, சத்தியா பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோடங்கிப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் தினகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை