உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சம்மிட் 60 மாரத்தான் போட்டி 5 கி.மீ., ஓடிய மாணவர்கள்

சம்மிட் 60 மாரத்தான் போட்டி 5 கி.மீ., ஓடிய மாணவர்கள்

கோவை,: பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 'சம்மிட் 60' எனும் மாரத்தான் நேற்று நடந்தது. பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவனத்தின், 60ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த மாரத்தானில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.தவிர, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆரோக்கியம், ஒற்றுமையை வலியுறுத்தி ஓடினர். மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) ஸ்டாலின் மாரத்தானை துவக்கிவைத்தார்.பீளமேட்டில் துவங்கிய மாரத்தான், லட்சுமி மில்ஸ் வழியாக, 5 கி.மீ., சென்று மீண்டும் பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிறைவடைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி., மேலாண்மை நிறுவன இயக்குனர் ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ