உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிமுக விழாவில் அசத்திய மாணவர்கள்

அறிமுக விழாவில் அசத்திய மாணவர்கள்

கோவை; சரவணம்பட்டி, சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், 'சுவாகத்' எனும் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுக விழா நடந்தது. இது, மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் அமைந்தது. சி.எம்.எஸ்., கல்விக்குழும அறக்கட்டளையின் தலைவர் கிரீசன் தலைமை வகித்தார். மாணவர்கள் பாடல், நடனம், மைமிங், நாடகம் உள்ளிட்ட கலை, விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை திறம்பட வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு வழங்கப்பட்டது. சி.எம்.எஸ்., கல்விக்குழும அறக்கட்டளையின் துணைத்தலைவர் சஜீஷ் குமார், செயலாளர் சந்திரகுமார், இணை செயலாளர் சஷிதரன், பொருளாளர் விஜயக்குமார், சி.எம்.எஸ்., கல்விக்குழு சி.இ.ஓ., சந்தியா, கல்விசார் துணைத் தலைவர் சாலினி, நிர்வாக துணைத்தலைவர் சுஜதா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி