காரில் திடீர் தீ
கோவை: கணபதி, மணியகாரம்பாளையம், இளங்கோ நகரில் வசித்து வருபவர் கவுதம்,28. தனது காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். இரவில் திடீரென காரில் இருந்து புகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரர் கவுதமிடம் தெரிவித்தார். கவுதம் சென்று பார்த்தபோது கார் தீ பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.