உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சன்ஸ்கிரீன் லோஷனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது

சன்ஸ்கிரீன் லோஷனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து நமது சருமத்தை பாதுகாக்க, சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், சன்ஸ்கிரீன் லோஷனை சரியாக பயன்படுத்தினால்தான் பலன் என்கிறார், அழகுக் கலை நிபுணர் ஐஸ்வர்யா. எப்படி சரியாக பயன்படுத்துவது...? இதோ அவரே சொல்கிறார்! n சன்ஸ்கிரீனை நேரடியாக முகத்தில் பயன்படுத்தினால், அது சருமத்தை பாதிக்கக்கூடும். எனவே, சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் முன், முதலில் மாய்ஸ்ச்சரைசர் கிரீம் பயன்படுத்த வேண்டும். n ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், ஜெல் அல்லது லிக்விட் வகை மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தில் எண்ணெய் பசையை அதிகரிக்காமல், தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். n வறண்ட சருமம் உள்ளவர்கள், கிரீம் வகை மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை