உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சாலையோரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்

பெ.நா.பாளையம்; மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை துறை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலை, கோவை கோட்ட பராமரிப்பில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளை சார்ந்த மேட்டுப்பாளையம் ரோட்டின் ஜி.என்.மில்ஸ் பிரிவு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, சாலை பகுதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன.கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் சாலையின் இரு புறம் ஓரங்களிலும் உள்ள விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை தாங்களாகவே முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும்.தவறும்பட்சத்தில், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவுக்கு அவர்களே பொறுப்பு என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !