உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓவர் பிரின்ட் தபால் தலை பின்னணியில் ஆச்சரியம்

ஓவர் பிரின்ட் தபால் தலை பின்னணியில் ஆச்சரியம்

ஒரு நாடு இரண்டு நாடுகளாக பிரியும் போது, பழைய நாட்டின் அஞ்சல் தலையின் மீது புது நாடு, தனது பெயரை 'சீல்' வைத்து பயன்படுத்தும். இதற்கு 'ஓவர் பிரின்ட்' என்று பெயர்.இந்திய பிரிவினையின் போது, பாக்., பகுதியில் இருந்த அஞ்சலகங்களில், இந்திய அஞ்சல் தலைகள் தான் இருந்தன. உடனடியாக, பாக்., அஞ்சல் தலைகளை அச்சடிக்க முடியவில்லை. அதிக எண்ணிக்கையில் இருந்த இந்திய அஞ்சல் தலைகளை, அப்படியே பயன்படுத்தவும் விருப்பமில்லை.ஆரம்பத்தில், பாக்., இந்திய அஞ்சல் தலைகளை, கூடுதல் கட்டணம் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தியது. 1947 அக்., 1 முதல், இந்திய அஞ்சல் தலைகளில் 'பாகிஸ்தான்' என முத்திரையிடப்பட்டு, அஞ்சல் தலைகள் பயன்படுத்தப்பட்டன.படத்தில் உள்ளது, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறித்த, ஆங்கிலேயே ஆட்சியின் போது வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் அஞ்சல் தலை. இந்தியாவின் பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தான் என்ற பெயரும் முத்திரை இடப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை